20 Jun 2012

சத்திய மேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்)


ஆமிர் கான் இந்தியாவிற்கு கிடைத்த கலைப் பொக்கிஷம். தொடர்ச்சியாக பல வருடங்களாக அவர் சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களைத் தனது படங்களில் சொல்லி வந்திருக்கிறார். சமயம் வாய்க்கும்போதெல்லாம் பொது நிகழ்ச்சிகளிலும் அவரது சீர்திருத்தப் பரப்புரைகள் தொடர்ந்தே வந்திருக்கின்றன.

குடித்துவிட்டு கலாட்டா செய்யும் நடிகர்களுக்கு மத்தியில் இப்படியும் மக்கள் விழிப்புணர்வு, சமூகச் சீர்திருத்த நிகழ்ச்சிகளை நடத்தும் ஆமிர் கானைப் பாராட்டுகிறோமோ இல்லையோ பழிக்காமல் இருக்க வேண்டும்.

இப்போது அவர் தொகுத்து வழங்கும் சத்திய மேவ ஜெயதே என்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஸ்டார் பிளஸ் சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது.
அந்த நிகழ்ச்சியைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லையே தவிர, அந்த நிகழ்ச்சியைப் பற்றிய கருத்துக்களும் அப்டேட்டுகளும் வலைத்தளங்கள் பலவற்றில் காணக் கிடைக்கின்றன. சில வலைத்தளங்களில் அந்த நிகழ்ச்சியில் நடந்த அத்தனை விவாதங்களையும் அப்படியே தொகுத்துக் கொடுத்திருந்தனர்.

டாக்டர்கள், தனியார் மருத்துவமனைகள், பொது மருத்துவமனைகள் பற்றிய அவரது நிகழ்ச்சி நிறைய மருத்துவர்களை கொதித்தெழ வைத்துள்ளன. ஆமிர் கான் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கேட்கத் தொடங்கிவிட்டனர்.

தீக்கதிரில் தே.இலட்சுமணன்  எழுதிய "உண்மை கசக்கும்" என்ற கட்டுரையைப் படித்தேன். அருமை. ஆனால், அதற்காக நமது நாட்டை கம்யூனிஸ்ட் நாடாகவா மாற்ற முடியும்? இருக்கும் அமைப்புக்குள் இந்த நிலைமையை எப்படிச் சீர் செய்ய முடியும் என்பதே இப்போது சரியான வழியாக இருக்கும். பேன் கடிக்கிறதே என்று கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையைச் சொரியச் சொல்கிறார் தே.இலட்சுமணன். இருப்பினும், பல நேர்மையான கருத்துகளும், கோபங்களும் இந்த கட்டுரையில் இருப்பதால் அப்படியே கீழே தருகிறேன்


சில சீர் திருத்தக் கருத்துக்களை சமூக அக்கறையோடு மக்களிடம் தொலைக்காட்சி மூலம் எடுத்துச் செல்லுகிறார் என்றால் அந்தக் கருத்துக்கள் கோடிக்கணக்கான மக்களிடம் பரவுவது போற்றும் செயலே.

அப்படிப்பட்ட ஒரு கருத்தை, அதாவதுஏழை மக்களுக்கு மருத்துவ உதவி இலகு வாக கிடைக்க வேண்டும் எனக் கனவு காணுவது மதிப்புள்ள கனவுதான்என்பதை பலவித ஆதாரங்கள், விளக்கங்கள் கூறி விளக் குகிறார். இதற்கு இந்து பத்திரிகை கொடுத்துள்ள சுருக்கமான தலைப்புHeath Care for the Poor, a dream worth dreamingஎன்பதாகும்.

செல்வந்தர்களுக்கும், ஏழைகளுக்கும் தரமான மருத்துவ உதவி கிடைக்க வேண்டும் என விரும்புவது செயலுக்கு வர முடியாத, சாதனை படைக்க முடியாத கனவு எனப் பல ருக்குத் தோன்றலாம். ஆனால், இந்தக் கனவு மதிப்புள்ள கனவுதான் என்பதற்கும், அது நடைமுறைக்கு வரும் என்பதற்கும் போதிய காரணங்கள் உள்ளன என விளக்க ஆரம்பிக்கிறார்.

ஏழைகளும்தான் ஏராளமான வரிகளைத் தருகிறார்கள். ஆனாலும், மறைமுக வரி என்ற பெயரால் ஏழை மக்கள் தருவது ஏராளம் என் கிறார். உண்மைதான். மத்திய அரசு, மாநில அரசுகள் விதிக்கும் மறைமுக வரிகள் (Indirect Tax) செல்வந்தர்களின் நேர்முக வரியை விட (Direct Tax) அதிகம்தான். சிறுதுளி பெருவெள்ளம் போல கோடானுகோடி மக்கள் எந்தப் பொருள் வாங்கினாலும் அதில் மறைமுக வரி கள் என்பது உண்டு. ஆகவே, ஏழைகள் தரும் மறைமுக வரியின் மூலம்தான், நேர்முக வரியை விட அரசுக்கு அதிகபட்ச வருவாய் கிடைக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு தான் அமீர்கான் அரசுக்கு ஒரு வினா தொடுக்கிறார். மத்திய அரசு உள்நாட்டு மொத்த உற்பத்தியின் (Gross Domestic Product) மதிப்பில் பொது மருத்துவப் பராமரிப்புக்கு வெறும் 1.4 சத வீதம்தான் ஒதுக்க வேண்டுமா? என நெற்றி அடி தொடுக்கிறார். விற்பன்னர்கள் கேட்பது, பொது மருத்துவப் பராமரிப்புக்கு குறைந்தபட் சம் 6 சதவீதமாவது ஒதுக்க வேண்டும் என்கிறார்கள். நான் பொருளாதார நிபுணர் அல்ல, மருத்துவரும் அல்ல. ஆனால், நான் வேண்டுவது குறைந்தபட்சம் பொது சுகாதார பராமரிப்புக்கு மத்திய அரசு 10 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்கின்றேன் எனக் கோரிக்கை வைக்கிறார்.

ஏன் மத்திய அரசும், மாநில அரசுகளும் ஏராளமான பொது மருத்துவமனைகளை கட்டக் கூடாது? ஏன் பொது மருத்துவக்கல்லூரிகளைக் கட்டக் கூடாது? இதற்கு மாறாக தனியார் மருத்துவமனைகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் என ஏராளமாக எழும்புகின்றன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டுமானால் ரூ.50 லட்சம், ரூ.60 லட்சம் என மறைமுகமாக நன்கொடை என்ற பெயரால் வாங்கப்படுவதாகவும் குறிப்பிடுகிறார். இங்கே முத்தாய்ப்பாக ஒரு கருத்தை வைக்கிறார். தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஏராளமாக உருவாவதே வியாபார நோக்கம்தான். தனியார் மருத்துவக் கல்லூரிகள் சட்டப்படி மருத்துவமனைகளை கட்ட வேண்டும்; சீரான மருத்துவமனைகளாக இல்லாத மருத்துவக் கல்லூரிகளில் படித்துவிட்டு வரும் மாணவர்கள் எப்படி சிறந்த மருத்துவராக செயல்பட முடியும் எனக் கேட்கிறார். மேலும், இன்னொரு அபிப்பிராயத்தையும் வைக்கிறார். தனியார் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவ மனைகள் வரட்டும்; ஆனால், மத்திய - மாநில அரசுகள் ஏராளமான, தரமான பொது மருத்துவக் கல்லூரிகளையும், பொது மருத்துவமனைகளையும் உருவாக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளுக்கு ஈடாக பொது மருத்துவக் கல்லூரிகளும் உயர வேண்டும் என்கிறார். இந்தக் கனவைத்தான் நடிகர் அமீர்கான் நடைமுறைக்கு வரும் கனவு என்கிறார்.

இங்கேதான் அமீர்கான் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மத்திய அரசின் கொள்கை, இதே கொள்கையைப் பின்பற்றும் மாநில அரசுகளின் கொள்கைபொது சுகாதாரம்எனும் அந்த ஒப்பற்றக் கொள் கையை மெல்ல மெல்ல சாகடிப்பதுதான். பொது மருத்துவமனையை, பொது சுகாதாரத்தைக் கட்டிக் காப்பது அரசின் பொறுப் பல்ல என்பதைப் புரிந்து கொள்ள, அரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பில் 1.4 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதே, அதுவே போதுமான ஆதாரம்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆய்வின்படி உலகில் 175 நாடுகளைக் கணக்கிட் டதில், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், பொது சுகாதாரத்திற்கு குறைவாக செலவிடும் 171-வது இடத்தில் இந்தியா உள்ளது. ஆனால், அதே நேரத்தில் தனியார் மருத்துவத்துறை செலவிடுவதில் 175 நாடுகளில் 17-வது இடத் தில் உள்ளது என்பதை அறியும் போது நமக்கு ஆச்சரியமாக உள்ளது.
இந்திய மக்கள் ஒட்டுமொத்தமாக மருத்துவ சிகிச்சைக்காக செலவிடும் தொகை சரா சரியாக ரூ.1,69,252 கோடியாகும். தனியார் துறை மருத்துவமனைகள் நோயாளிகளிடமிருந்து பறிப்பது மட்டும் ரூ.1,62,906 கோடி யாகும்.

நடிகர் அமீர்கான் தன் நிகழ்ச்சியில் மருந்துகள் தயாரிப்பு, விற்பனையில் மோசடி பற்றியும் ஆதாரங்களோடு நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்.

உதாரணமாக, நீரழிவு நோய்க்கு glimepride மாத்திரைகள் மருத்துவர் எழுதித் தருகிறார். இதன் விலை 10 மாத்திரைகள் ரூ.2. ஆனால் இதே மாத்திரை Amaryl என்ற கம்பெனி பெயரோடு வெளிவருகிறபோது அதன் விலை ரூ.125. இப்படி பல உதாரணங்களைக் காட்டு கிறார்.

Brand Name என்ற பெயரில் இப்படி கம்பெனிகள் பலமடங்கு கொள்ளையடிப்பதைத் தோலுரித்துக் காட்டுகிறார்.

இதயம் சம்பந்தமான Heart Attack நோய்க்கு streptokïnse என்ற ஊசி மருந்து தரப்படுகிறது. இதன் தயாரிப்பு விலை ரூ.1000. ஆனால் அதே வகை மருந்து கம் பெனி பெயரோடு சந்தைக்கு வருகிற போது ரூ.5000.

ஆனால், இதுபோன்ற கொள்ளையில் அரசு தலையிடுவது இல்லை. வெளிநாட்டு மருந்து நிறுவனங்கள் இந்தியாவில் நுழைந்து கொள்ளையடிக்கின்றன. இந்தியாவில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்களை விலை கொடுத்து வாங்கி கபளீகரம் செய்துவிடுகின்றன. அதன் விளைவு, சில முக்கிய மருந்து விற்பனையில் அந்நிய நாட்டு கம்பெனிகள் ஏகபோகமாக சம்பாதிக்கின்றன. அந்த கம்பெனிகள் நிர்ணயிக்கும் விலைதான் கொடிகட்டிப் பறக்கின்றது. எப்படி தனியார் மருத்துவ மனைகளைத் துவக்க வெளிநாட்டு நிறுவனங் கள் 100 சதவீதம் முதலீடு செய்யலாமோ, அதேபோல் மருந்து தயாரிப்பிலும் வெளிநாட்டு கம்பெனிகள் 100 சதவீதம் முதலீடு செய்யலாம். அரசாங்கங்கள் மௌனம் சாதிப்பதுதான் இதில் ஆச்சரியம்.

மருத்துவர்கள் கூட நோய்களுக்கு மருந்துகள் எழுதி கொடுக்கிறபோது, குறிப்பிட்ட மருந்துக் கடையில்தான் மருந்துகள் வாங்க வேண்டும் (அந்த மருந்து அந்தக் குறிப்பிட்ட கடையில்தான் கிடைக்கும், மற்ற கடைகளில் கிடைக்காது), குறிப்பிட்ட இடத்தில்தான் ஸ்கேன் எடுக்க வேண்டும், எக்ஸ்ரே எடுக்க வேண்டும் என்றும் நிர்ப்பந்திப்பதிலும் உண்டு.

முத்தாய்ப்பாக அவர் சொல்லியுள்ளது, ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் சமமாக நல்ல, சிறந்த சிகிச்சை முறை பொது சுகாதார பராமரிப்பின் மூலம் கிடைக்க வேண்டும். இந்த என் கனவு சாத்தியப்படும் என்கிறார்? அவரின் எண்ணம் நல்ல எண்ணம்.

அவரின் கனவு ஓர் அடிப்படை கேள்விக்கு உட்பட்டது. சமூகத்தையே அடிப்படையாக மாற்றிப் போட வேண்டிய கேள்வி இது. வர்க்கங்களைக் கொண்ட சமுதாயத்தில் பொதுவான நீதி, பொதுவான பராமரிப்பு, சம அந் தஸ்து எப்படி சாத்தியப்படும்?

இன்றைய பெரும்பாலான மாநிலங்களின், மத்திய அரசின் கொள்கைகள் என்ன? பொது நிறுவனங்களையெல்லாம் தனியாருக்கு விற்றுத்தள்ளும் கொள்கையே. மத்திய அரசு வேகமாக அமல்படுத்தி வரும் இந்தக் கொடுமையைப் பார்த்துக் கொண்டு தானே வருகிறோம். எல்லாவற்றையுமே (கல்வி,சுகாதாரம் உட்பட) தனியார்மயம் ஆக்கிக்கொண்டு வரும் அரசிடம் இதை எப்படி எதிர்பார்க்க முடியும்?

நான் சோவியத் யூனியன் சென்றிருந்தேன். அங்கு நான் நேரில் கண்ட காட்சி, அந்த நாட்டில் தனியார் மருத்துவமனையே கிடையாது. தனியான டாக்டர்கள் கிடையாது. மருத்துவ சிகிச்சை எங்கும் இலவசம். மருத்துவ சிகிச்சைக்கு பணம் வாங்குவது என்பது எங்கும் மருந்துக்கும் இல்லை.

இந்தியாவிலும் அது சாத்தியம். ஆனால் அது இப்போதில்லை. பின் எப்போது? இந்திய மக்கள் அந்த கொள்கை நோக்கி விரையும் போது, அது சாத்தியமா? சாத்தியமே.

ஆனால் அமீர்கானின் தொண்டுள்ளம் தொடர வேண்டும். இந்திய மருத்துவ சங்கம், அமீர்கான் ஒட்டுமொத்த மருத்துவத் துறையையே கேவலப்படுத்தி விட்டார். அவர் இதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும். அல்லாது போனால் அவர் மீது வழக்குத் தொடரப்படும் என அறிக்கைவிட்டது. அமீர்கான், வருத்தம் தெரிவிக்க மறுத்துவிட்டார். வேண்டுமானால் என் மீது வழக்கு தொடரட்டும். அங்கு நான் அவர்களைச் சந்திக்கிறேன் என்று துணிவுடன் கூறிவிட்டார். இந்தத் துணிவும் தொடர வேண்டும்.
- நன்றி : தீக்கதிர் 20.6.2012

டைம்ஸ் ஆப் இந்திய இப்படிச் சொல்கிறது.

Actor Aamir Khan continues to receive accolades for his debut show on TV: Satyamev Jayate.

One episode after the other, Aamir has perhaps managed to do what no other actor has done so far: create a national stir. He has caused state governments to take action against illegal practices.

So when Aamir chose to do an expose on the malpractices in the Indian medical system, little did he know the huge impact that episode would have. Although certain doctors were angered by Khan's expose which they felt was portrayed incorrectly, our politicians are mighty impressed with the actor.

Aamir Khan will now make his way to the Indian parliament on Thursday morning (21st June 2012) where he has been invited by Rajya Sabha MP, Shanta Kumar who belongs to the BJP party, as told to sources. (Shanta Kumar heads the parliamentary standing committee on commerce).

Sources further reveal that the actor has been invited to share the research he and his team did to expose the level of corruption and unethical practices adopted by the medical fraternity.

No matter what critics have to say about the show, Aamir Khan through Satyamev Jayate continues to open the public eye and stir the government to take action. A smart way of having a political impact without being a politician. Great going Aamir!
- நன்றி Times of India20.6.2012

இதைப் போன்ற விஷயங்களில், இளைஞர்கள் ஆமிர் கானின் பின்னால் நிற்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.