9 May 2013

இந்தியா?... சீனா?.. நாம் எங்கே செல்கிறோம்.




கீழ்க்கண்ட இரண்டு செய்திகளைப் படியுங்கள். ஒவ்வொரு கட்சிகளின் உண்மை முகங்களையும் காணுங்கள். நாம் ஏற்கனேவே சீனாவிடம் தோல்வி கண்ட ஒரு தேசம். உலகத்திலேயே இந்தியாவுக்கு பெரிய எதிரி சீனாதான் என்று தைரியமாகச் சொன்ன ஒரே பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ்தான். கீழ்க்கண்ட பதிவுகளைப் படித்துவிட்டு நேர்மையான நெஞ்சம் கொண்டவர்கள், நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள். கம்யூனிஸ்ட் கட்சி என்பது யாது? அதன் கொள்கைகள் என்ன? அது யாருக்காக உழைக்கிறது. கடந்த காலப் பார்வையோடு இணைத்து வருங்கால நிகழ்வுகளைக் கணித்துப் பாருங்கள். சீனா நமது நண்பனா? எதிரியா? கம்யூனிஸ்ட் கட்சி என்பது (அது எந்த கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்தாலும் சரிதான்) உளவு நிறுவனமா அல்லது இந்தியாவுக்கு ஆபந்தாந்தவனா? நன்மக்களே முடிவு செய்வீர்! (இலங்கையின் ராணுவத்தளவாடம் அமைக்கும் அதே சீனாதான் காஷ்மீரத்தையும் அபகரிக்கிறது. சீனப் பிரதம் இந்தியா வருவதற்கு சில காலத்திற்கு முன் இப்படி நிகழ்வது தற்செயலானதா? ஏற்பாடு செய்யப்பட்டதா? தமிழக மீடியாக்கள் ஏன் இந்த செய்திக்கு அதி முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன் என்கின்றன? பழங்கலாத்திலிருந்து பல காலங்களாக சீனாவுக்கு, ஆன்மிகத்தில் ஆகட்டும், தத்துவத்தில் ஆகட்டும், பொருளாதாரத்தில் ஆகட்டும். இந்தியாவே வழிகாட்டி தேசமாக இருந்திருக்கிறது (மாவோ வந்த பிறகு வேறு கதை என்பது வேறு). இன்று சீனா நமக்குப் பாடம் கற்பிக்கிறதோ என்று தோன்றுகிறதா? நன்மக்களே சிந்திப்பீர்! (இத்தாலிய அடிவருடி) காங்கிரஸ், கம்யூனிச உளவு நிறுவனங்கள் இதற்கு மத்தியில் நாம் அடுத்த நாடாளுமன்றத்திற்கு நாம் யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம்.?.... சிந்திப்பீர்.... (மோடியாக இருந்தால் இந்தியா பிழைக்கும்.)

(http://mahabharatham.arasan.info என்ற வலைப்பூவில் மஹாபாரதத்தை மொழிபெயர்த்துக் கொண்டிருப்பதால் அரசியல் சமூகம் குறித்த கட்டுரைகளை இட முடியவில்லை. மன்னிக்கவும்.)

இனி செய்திகள்....

எல்லைக்குள் சீன ராணுவம் 10 கி.மீ ஊடுருவல் இந்திய படைகள் விரைகின்றன - 24.4.2013, தினகரன்

புதுடெல்லி : காஷ்மீர் எல்லையில் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம், 10 கி.மீ தூரம் ஊடுருவிய நிலையில், அங்கு இந்திய படைகள் விரைகின்றன. ராணுவ தளபதி விக்ரம் சிங்கும் காஷ்மீர் விரைந்துள்ளார். எனினும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு சுமுக தீர்வு காணப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. இதற்கு பா.. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் லடாக்கில் உள்ள தவ்லத் பெக் ஆல்டி பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி இந்திய பகுதிக்குள் சீன ராணுவத்தினர் கடந்த 15ம் தேதி இரவு ஊடுருவினர். இந்தியாவுக்குள் 10 கி.மீ. தூரம் வந்த சீன ராணுவத்தினர் அங்கு தற்காலிக கூடாரம் அமைத்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்ததும், சீனாவுடன் மத்திய அரசு தொடர்பு கொண்டு பேசி வருகிறது. ஆனால், ஊடுருவல் இல்லை என்றும் தங்கள் ராணுவத்தினர் எல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டதாகவும் சீனா கூறியது.

ஹெலிகாப்டர்கள் ஊடுருவல்: லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் மட்டுமின்றி அந்நாட்டின் ராணுவ ஹெலிகாப்டர்களும் இந்திய பகுதிக்குள் ஊடுருவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து எல்லையில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், சீன ராணுவம் ஊடுருவியுள்ள எல்லைப்பகுதிக்கு இந்திய படைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. அங்கு ஏராளமான வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், எல்லையில் பதற்றம் நிலவுகிறது. காஷ்மீர் மட்டுமின்றி அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் நேற்று மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அக்பரூதீன் கூறியதாவது: சீன ராணுவத்தினர் ஊடுருவியது குறித்து அந்நாட்டு அரசுடன் இந்தியா தொடர்ந்து பேசி வருகிறது. எல்லையில் ஊடுருவலுக்கு முன் இருந்த நிலைமையே தொடர வேண்டும் என்று சீனாவிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஊடுருவல் காரணமாக இருநாட்டு வீரர்களும் எதிர் எதிரே இருக்கும் நிலை உருவாகியுள்ளது.

எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தவறான கணிப்புகளால் இதுபோன்ற ஊடுருவல் நடந்திருக்கலாம். எல்லையில் இருதரப்பு ராணுவத்தினரும் பேச்சு நடத்தி வருகின்றனர். இந்தியா , சீனா இடையே ஏற்கனவே உள்ள ஒப்பந்தப்படி இப்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காணப்படும். இந்திய,சீன எல்லையில் அமைதி நீடிக்கிறது.

இவ்வாறு அக்பரூதீன் கூறினார். சீனா உறுதி: பெய்ஜிங்கில் நேற்று பேட்டியளித்த சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஹுவா சன்யிங், ‘‘சீன ராணுவம் ஊடுருவவில்லை என்று ஏற்கனவே தெரிவித்தோம். இந்தியா,சீனா உறவு நல்ல நிலைமையில் உள்ளது. உறவை மேம்படுத்தும் வகையில் எல்லை பிரச்னைக்கு தீர்வு காண இருதரப்பும் சுமுகமான முறையில் பேசுவதற்கு ஒத்துழைப்போம்என்றார்.

விக்ரம் சிங் ஆய்வு: இதனிடையே, ராணுவ தளபதி விக்ரம் சிங் நேற்று காஷ்மீர் சென்றார். எல்லையில் நிலவும் நிலைமைகள் குறித்து ராணுவ அதிகாரிகளுடன் ஆய்வு நடத்துகிறார். சுமுக தீர்வு ஏற்பட அவர் முயற்சி மேற்கொள்வார் என்று ராணுவ அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

பா.. கோபம்: டெல்லியில் பேட்டியளித்த பா.. மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, ‘‘சீன ஊடுருவல் முற்றிலும் தவறானது. கடுமையான கண்டனத்துக்குரியது. சீனாவை பார்த்து மத்திய அரசு பயப்படுகிறது. இந்திய அரசு பலவீனமாக இருப்பதாலும் அதன் மென்மையான கொள்கைகளாலும் சீனா அடிக்கடி நம்மை சீண்டிப்பார்க்கிறது. ஊடுருவலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும்’’ என்றார்.

குர்ஷித் விளக்கம்

வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறுகையில், ‘‘எல்லையில் இதுபோன்று பிரச்னைகள் வந்தால் பேசி தீர்த்துக்கொள்ள ஏற்கனவே ஒப்பந்தம் உள்ளது. இதன் அடிப்படையில் இருதரப்பு ராணுவ அதிகாரிகள் பேசி வருகின்றனர். பேச்சு மூலம் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். இந்தியாவின் நலனை காக்க தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும்’’ என்றார். - நன்றி: தினகரன்

இந்திய-சீன உறவு பாதிக்காத வகையில் எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்: பிரகாஷ் காரத் - 01.05.2013 தினமணி
இந்திய-சீன உறவு பாதிக்காத வகையில் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும் என்று பிரகாஷ்காரத் தெரிவித்தார்.
இது குறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
நிலக்கரி ஒதுக்கீடு முறைகேடு வழக்கு விசாரணை அறிக்கையை மத்திய சட்டத்துறை அமைச்சர் அஸ்வனிகுமார் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டதன் மூலம் மத்திய புலனாய்வுத்துறை(சிபிஐ) தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாக உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் விமர்சனத்தை தொடர்ந்து, சட்டத்துறை அமைச்சர் அஸ்வனிகுமார் பதவிவிலக வேண்டும். அஸ்வனிகுமாரை ராஜிநாமா செய்ய வேண்டுமென்ற நிலைப்பாட்டை பிரதமர் எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையை பிரதமரிடம் நாடு எதிர்ப்பார்க்கிறது.
இந்திய-சீன எல்லையில் திடீர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீனப்படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவியுள்ளதாக பிரச்னை எழுந்துள்ளது. எல்லை சிக்கலை தீர்த்து கொள்வதற்கு இரு நாடுகளும் பரஸ்பரம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதோடு, செயல்திட்டத்தையும் உருவாக்கியுள்ளன. கட்டுப்பாட்டு எல்லை, இரு நாடுகளுக்கும் இடையிலான இறுதி எல்லை இல்லை. ஊடகங்கள் வர்ணிப்பது போல இது மிகப் பெரிய சிக்கலும் இல்லை. இது நீண்டகாலமாக நிலவும் பிரச்னை. எனினும், கடந்த 50 ஆண்டுகளாக சீனாவுடன் இந்தியா நல்லுறவை பேணி பாதுகாத்து வந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே சுமுகமான உறவு நீடிக்கிறது. அடுத்தவாரம் வெளியுறவுத்துறை அமைச்சர் சீனா செல்லும்போது பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என்று எதிர்ப்பார்க்கிறோம். ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் அல்லாமல் உயர்மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தினால் பிரச்னைக்கு நல்ல முடிவு கிடைக்கும் என்றார். - நன்றி : தினமணி
இந்திய-சீன எல்லையில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது : அமெரிக்கா

வாஷிங்டன், மே 7-
இந்தியாவின் லடாக் எல்லைப்பகுதிக்குள் சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து, தவுலத் பெக் ஒல்தி பகுதியில் கூடாரங்களை அமைத்து அடாவடி செய்தனர். நான்கு முறை நடைபெற்ற கொடி அமர்வு பேச்சு வார்த்தைகளை தொடர்ந்து சீன ராணுவம் இந்திய பகுதியைவிட்டு ஞாயிற்றுக்கிழமை வெளியேறியது.
இந்நிலையில் அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் சீனா குறித்த தனது ஆண்டு அறிக்கையை அமெரிக்க நாடாளுமன்றத்தில் அளித்தது.
அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஆண்டுகளில் இந்திய - சீன பொருளாதார, அரசியல் உறவுகள் வளர்ந்துள்ள போதிலும், இருநாட்டு எல்லைகளிலும் தொடர்ந்து பதட்டம் நிலவிவருகிறது. இருநாடுகளும் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் 4,057 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன.
ஆசிய வளர்ச்சி வங்கி இந்தியாவுக்கு வழங்குவதாக இருந்த 2.9 பில்லியன் டாலர் கடனை தடுக்க சீனா முயற்சித்தது. இந்தக் கடனில் ஒருபகுதி அருணாச்சல பிரதேசத்தில் தண்ணீர் வசதியை மேம்படுத்த பயன்படுத்தப்படலாம் என்று கூறி இந்த செயலை செய்தது. இது சீனா எல்லைப் பிரச்சினைகளில் பன்னாட்டு அமைப்பு வழியாக தனது அதிகாரத்தை நிலைநிறுத்த செய்த முதல் முயற்சியாகும்.
இந்தியாவுக்குள் சீனாவின் ஊடுருவல் முன்பை விட அதிகரித்து இருப்பதாக இந்திய செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எல்லை பிரச்சினைகளில் சீனா ராணுவத்தை பயன்படுத்திய விதம் சில நேரங்களில் போர் மூள வழிவகுத்துள்ளது. இதனால் இந்தியாவுடன் 1962-ம் ஆண்டும், வியட்நாமில் 1979 ம் ஆண்டும் போர் நடந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி : மாலை மலர்